தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டம்

தவளக்குப்பம் அருகே தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-15 17:00 GMT
அரியாங்குப்பம், டிச.
தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம் - திருக்காஞ்சி செல்லும் சாலையில் பிரிஸ்ட் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயின்று வரும் மாணவ, மாணவிகள் நேற்று பெற்றோருடன் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த போராட்டம் குறித்து மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘கடந்த 2 ஆண்டுகளாக படித்து வரும் நாங்கள் கல்லூரிக்குள் சென்றதில்லை. நாங்கள் கல்விக்கட்டணம் கட்டியதற்கான எந்தவொரு ஆதாரமும் எங்களிடம் இல்லை. கடந்த ஒன்றரை மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தவில்லை. ஆனால் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை மட்டும் கேட்கின்றனர். 
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டாலும் எந்தவித பதிலும் அளிப்பதில்லை. இதனால் எங்களின் எதிர்காலம் பாதிக்கும் நிலை உள்ளது” என்றனர்.
மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்து தவளக்குப்பம் போலீசார் விரைந்து சென்று, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்