சின்னசேலம் அருகே பட்டப்பகலில் மின் ஊழியர் வீட்டில் ரூ 2 லட்சம் நகை பணம் கொள்ளை
சின்னசேலம் அருகே பட்டப்பகலில் மின் ஊழியர் வீட்டில் ரூ 2 லட்சம் நகை பணம் கொள்ளை;
சின்னசேலம்
சின்னசேலம் அருகே எரவார் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து(வயது 54). இவர் கள்ளக்குறிச்சியில் மின் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பழனிமுத்து மனைவி கன்னியம்மாளிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். உடனே அவர் தொட்டியில் தண்ணீர் இருப்பதாகவும், அதை பருகிவிட்டு செல்லுமாறு கூறி வீ்ட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள தனது நிலத்துக்கு சென்றார்.
சில மணி நேரத்துக்கு பிறகு வீ்டடு்க்கு வந்த கன்னியம்மாள் அறையில் இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 7 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு வந்த மர்ம பெண் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்பிரிவு ஏட்டு ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.