வெள்ளகோவிலில் வட்டமலைகரைஓடை அணை வேகமாக நிரம்பி வருகிறது

வெள்ளகோவிலில் வட்டமலைகரைஓடை அணை வேகமாக நிரம்பி வருகிறது

Update: 2021-12-15 16:39 GMT
வெள்ளகோவில், 
வெள்ளகோவிலில் வட்டமலைகரைஓடை அணை வேகமாக நிரம்பி வருகிறது. 
அணை
வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் 1980-ம் ஆண்டு 600 ஏக்கர் பரப்பளவில் வட்டலை ஓடை கரை அணை கட்டப்பட்டது. இந்த அணையின் உயரம் 24.75 அடி. இந்த அணை மூலம் 30 கிராமங்களில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த அணைக்கு கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. 
 எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால்  கள்ளிபாளையம் ஷட்டரிலிருந்து  தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
பறவைகள்
இந்த  தண்ணீர் இந்த மாதம் 1-ந் தேதி வட்டமலை கரை ஓடை அணைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தும் மலர் தூவியும் வரவேற்றனர். தற்போது 16 அடி உயரம் அளவு நீர் வந்துள்ளது. இதனால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 
அணை நீரின் கொள்ளளவு 24.75 அடி ஆகும்.  அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் சென்று அணையை பார்வையிட்டு செல்போன் மூலம் செல்பி எடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகள்