அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வங்கிகள் வேலைநிறுத்தம்

அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வங்கிகள் வேலைநிறுத்தம்

Update: 2021-12-15 16:34 GMT
திருப்பூர், 
அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்டமுன்வடிவம் கொண்டு வர இருப்பதால் அதை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வங்கிகள் வேலைநிறுத்தம் நடக்கிறது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 352 வங்கிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் என்று தெரியவருகிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் நேற்று மாலை டவுன்ஹால் அருகே யூனியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுக்குழுவின் மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொறுப்பாளர்கள் விஜய் ஆனந்த், ராதாகிருஷ்ணன், கற்பகம், மகாதேவன், ரங்கசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 10 மணிக்கு திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்