திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது

Update: 2021-12-15 16:32 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள செட்டிதாங்கல் கிராமத்தில் மளிகை கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட மளிகை கடைக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கே விற்பனைக்காக ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடையின் விற்பனையாளர் அருண்குமார்(வயது 31) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1,335 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த வருவாய்துறையினர் மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்