கோவை,
கோவை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 51 ஆயிரத்து 832 ஆக உயர்ந்தது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து 107 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 280 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 71 வயது முதியவர், 64 வயது முதியவர் மற்றும் 56 வயது ஆண் என 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2,492 ஆக அதிகரித்தது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,148 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.