விளாத்திகுளம் கல்லூரியில் மலர்பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
விளாத்திகுளம் கல்லூரியில் மலர் பூங்கா அமைக்கும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்;
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலை துறை சார்பாக அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மலர் பூங்கா அமைப்பதற்கான பணி நடந்தது. அதை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு பூஞ்செடிகள் நட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெயாசீதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகள், தி.மு.க நிர்வாகிகள் உள்படபலர் கலந்து கொண்டனர்.