சாத்தான்குளம் அருகே வேனில் பதுக்கி இருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

சாத்தான்குளம் அருகே வேனில் பதுக்கி இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்;

Update: 2021-12-15 12:48 GMT
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தாலுகா பழங்குளம் அருகே காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தான்குளம் வட்ட வழங்கல் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அறிவான்மொழி- பழங்குளம் சாலையில் கேட்பாரற்று நின்ற ஒரு வேனை சோதனை செய்தனர்.
அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளுக்கு மேல் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, கடத்தி வந்தவர்கள் யார்? எங்கு கடத்திச் சென்றனர்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்