தர்மபுரியில் நடந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ55 கோடி கடன் உதவிகள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
தர்மபுரியில் நடந்த விழாவில் 645 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ55 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த விழாவில் 645 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.55 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.
மகளிர் சுய உதவி குழுக்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். திருத்தணியில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் பாபு வரவேற்றார்.
நலத்திட்ட உதவிகள்
இந்த விழாவில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 645 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 8,385 பெண்களுக்கு ரூ.55 கோடியே 6 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மாலினி, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அசோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவ காந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தீபா, மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் அங்குசாமி, முரளி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.