தாம்பரத்தில் சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கை

தாம்பரத்தில் சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கை தமிழக அரசு உத்தரவு.

Update: 2021-12-15 00:13 GMT
சென்னை,

தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலையை இணைக்கும் விதமாக பாதசாரிகளுக்கான சுரங்கப்பாதை மற்றும் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவித்தார்.

இதுகுறித்து அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் கடிதம் எழுதினார். இந்த திட்டத்தின்படி, சண்முகம் சாலையை ஜி.எஸ்.டி. சாலையுடன் இணைப்பதற்காகவும், கிழக்கு தாம்பரம் மற்றும் தாம்பரம் முடிச்சூர் சாலையை இணைப்பதற்காக ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்காகவும், சர்வீஸ் சாலை அமைக்கவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பி இருந்தார்.

இந்த அறிக்கையை தயாரித்த பிறகுதான் தனியார் நிலங்களை ஆர்ஜிதம் செய்வதற்கான மதிப்பீட்டை கணக்கிட முடியும் என்றும் கூறியிருந்தார். அவர் கோரியபடி விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ரூ.50 லட்சத்தை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்