மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி கடனுதவி
விருதுநகரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டன.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன் ஆகியோர் 2,078 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.106 கோடியே 6 லட்சம் மதிப்பிலான கடன்உதவிகளை வழங்கினர். மேலும் 5 இலங்கை தமிழர்மறுவாழ்வு முகாமில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.