சேதுநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் பகுதியில் சேதுநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை 6.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ ஆழ்வார்களுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நாலாயிரம் திவ்ய பிரபந்தமும், ஆண்டாள் திருப்பாவையும் ஓதப்பட்டது. பின்னர் பரமபதவாசல் வழியாக சேது நாராயண பெருமாள் வெளியேறி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோவில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.