மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

வத்திராயிருப்பில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-14 20:01 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்ெதாகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். அனைத்து பஸ் நிலையங்களிலும், பொது கழிப்பிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி, தாழ்தள வசதி, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். தாலுகா தலைவர் அல்போன்ஸ், தாலுகா செயலாளர் கணேசன், தாலுகா பொருளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
சாலை மறியலில் ஈடுபட்ட 60 மாற்றுத்திறனாளிகளை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்