மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104 கோடியில் நலத்திட்ட உதவிகள்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.104 கோடியில் நலத்திட்ட உதவிகள்

Update: 2021-12-14 19:39 GMT
சேலம், டிச.15-
சேலம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.104 கோடியில் வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
சேலம் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்கா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
ரூ.104 கோடி
மாவட்டத்தில் 2,137 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 27 ஆயிரத்து 970 பெண்களுக்கு ரூ.104 கோடியே 19 லட்சம் மதிப்பில் வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் சுய உதவிக் குழு பெண்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன்,  அருள், சதாசிவம், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) செல்வம், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சிவகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்