செம்மண் கடத்திய 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

செம்மண் கடத்திய 2 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

Update: 2021-12-14 19:38 GMT
ஓமலூர், டிச.15-
ஓமலூர் அருகே செம்மண் கடத்திய 2 டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
செம்மண் கடத்தல்
சேலம் மாவட்டத்தில் அனுமதியின் மண் மற்றும் கற்களை கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஓமலூர் அருகே பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் உத்திரசாமி, விவசாயி. இவருக்கு சொந்தமான கிரஷர் மற்றும் விவசாய நிலம் கொங்கரபட்டி பகுதியில் உள்ளது. கொங்கரபட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து செம்மண்ணை அவர் 2 லாரிகளில் கடத்தியதாக கூறப்படுகிறது. 
இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர் லாரிகளை வழிமறித்து சிறைபிடித்தனர். இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
பறிமுதல்
அதன் பேரில் தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் மேகலா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் செம்மண்ணை கடத்திய 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்