25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மோளாண்டிப்பட்டி ஏரி

25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மோளாண்டிப்பட்டி ஏரி;

Update: 2021-12-14 19:38 GMT
ஓமலூர், டிச.15-
ஓமலூர் அருகே மோளாண்டிப்பட்டி ஏரி 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது.
மோளாண்டிப்பட்டி ஏரி
ஓமலூர் அருகே நாரணம்பாளையம் ஊராட்சி வாடிப்பட்டி கிராமத்தில் சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் மோளாண்டிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வெள்ளாளப்பட்டி வழியாக தண்ணீர் வருவது வழக்கம். 
ஆனால் இந்த ஏரிக்கு வரும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்ததாலும், போதிய மழை இல்லாததாலும் கடந்த 25 ஆண்டுகளாக ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஓமலூர் மற்றும் ஏற்காடு மலைப்பகுதியில் நல்ல மழை பெய்ததாலும்,  மோளாண்டிப்பட்டி ஏரிக்கு வரும் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றி சீரமைக்கப்பட்டதாலும், ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு...
இதைத்தொடர்ந்து மோளாண்டிப்பட்டி ஏரி 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதன் காரணமாக ஏரி, கடல் போல காட்சி அளிக்கிறது. மேலும் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கிடா வெட்டி வழிபாடு நடத்தினார்கள். இதனிடையே உபரி நீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்பு ெசய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் உபரிநீர் விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்து, சரபங்கா ஆற்றில் கலக்கிறது. இதன் காரணமாக மஞ்சள், வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிரிப்பட்டுள்ள தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்