மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2021-12-14 19:32 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் 44 வயதுடைய கூலித் தொழிலாளி. இவரது 7 வயது மகள் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது அந்த தொழிலாளி, மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்ட சிறுமியின் தாய் அதிர்ச்சியடைந்தார். 
இதுதொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கணவர் மீது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில், அந்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
7 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார். அப்போது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்