ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூரில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகளை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாததால் 40 பேரை ேபாலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.