கோவில் உண்டியல் திருட்டு

கோவில் உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-12-14 19:08 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேருராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் திரு.வி.க. நகரில் உள்ள மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ேநற்று காலை இந்த கோவிலில் உண்டியல் இருந்த இடம் பெயர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. இந்த உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய சுமார் ரூ.50 ஆயிரம் இருந்திருக்கலாம் என்று பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்