சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் மாரியம்மாள். இவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2¾ பவுன் நகைகள், 4 கிராம் வெள்ளி தோடு ஆகியவற்றை காணவில்லை. யாரோ அதை திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரித்தார். பின்னர் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் குகன் தலைமையிலான போலீசார் கோவையில் பதுங்கி இருந்த விருதுநகரை சேர்ந்த ஜம்புகேஸ்வரன்(வயது 26) கைது செய்தனர்.