மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் உதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன் உதவி வழங்கப்பட்டது

Update: 2021-12-14 18:56 GMT
புதுக்கோட்டை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். இதேபோல அந்தந்த மாவட்டங்களில் கடன் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  நிகழ்ச்சிகள் காணொலியில் ஒளிபரப்பப்பட்டன. இதில் புதுக்கோட்டையில் மகராஜ் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 2,320 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 27 ஆயிரத்து 551 உறுப்பினர்களுக்கு ரூ.100 கோடியே 67 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதாராமு முன்னிலை வகித்தார். இதில், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்