மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடுமையான ஊனத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் வழங்க கோரி ராமநாதபுரத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹரிகரசுதன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் கோபால், கணேசன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா தலைவி நிலர்வேணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் கருப்பையா, நடராஜன், கணேசன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.மறியலை தொடர்ந்து ராமநாதபுரம் தாசில்தார் அங்கு விரைந்து வந்து கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.