அரசு பஸ் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி தலைநசுங்கி பலியானார்.

Update: 2021-12-14 18:21 GMT
நச்சலூர், 
நச்சலூர் அருகே உள்ள சேப்ளாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் முருகன் (வயது 33), விவசாயி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நெய்தலூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சேப்ளாப்பட்டி மயான கொட்டகை அருகே சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த முருகன் தலை மீது பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்