திருவட்டார்,
குமரி மாவட்டம், திருவட்டார் அருகே பூவன்கோட்டையை அடுத்த கல்லன்குழியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகன் பிரின்ஸ் (வயது25). இவர் கடந்த மாதம் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சென்றார். கடந்த 9-ந் பிரின்ஸ் ஓட்டல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் மாலத்தீவில் இருந்து விமானம் மூலமாக திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து வாகனம் மூலம் நள்ளிரவில் சொந்த ஊரான கல்லன்குழிக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலையில் பிரின்ஸ் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதுகுறித்து பிரின்சின் தந்தை பிரான்சிஸ் கூறும் போது, மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.