புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

Update: 2021-12-14 18:17 GMT
நாகர்கோவில், 
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. 
பஜனை விழா
வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் பஜனை விழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாள் மாலையில் ஜெபமாலை, ஆராதனை, திருப்பலி, இரவு பஜனை அர்ச்சிப்பு போன்றவை நடந்தது. பஜனையில் புனித செபஸ்தியாரின் சொரூபம் தாங்கிய சப்பரம் ஆலயத்தை சுற்றி கொண்டுவரப்பட்டது. 
18- ந் தேதி தென்மேற்கு மண்டலம், 19-ந்தேதி வடக்கு மண்டலம், 20-ந் தேதி கிழக்கு மண்டலம், 21-ந் தேதி குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந் தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் பஜனை நடைபெற்றது. இந்த பஜனை விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. 
பட்டாபிஷேக தேர் திருவிழா
தொடர்ந்து வருகிற 18-ந் தேதி முதல் பஜனை பட்டாபிஷேக தேர் திருவிழா தொடங்குகிறது. முதல் நாளான 18-ந் தேதி தென்மேற்கு மண்டலம், 19-ந் தேதி வடக்கு மண்டலம், 20-ந் தேதி கிழக்கு மண்டலம், 21-ந்தேதி குதிரைப்பந்திவிளை மண்டலம், 22-ந்தேதி பண்டாரக்காடு மண்டலம் சார்பில் பட்டாபிஷேக தேர் திருவிழா நடைபெறும். 23- ந்தேதி பொது பஜனை பட்டாபிஷேகம் கொண்டாடப்படும். இதற்கான தேரினை அந்தந்த மண்டலத்தினர் தயாரித்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ேதர் ஆலயத்திற்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறும். திருப்பலி முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு தேர் அர்ச்சிப்பும், மேள வாத்தியமும், வானவேடிக்கையும் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும். 
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், ஊர் துணைத்தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ்,  துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்