கே.வி.குப்பம் அருகே ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் நகை- பணம் திருட்டு

ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் வீட்டில் நகை- பணம் திருட்டு

Update: 2021-12-14 18:10 GMT
கே.வி.குப்பம்

கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (வயது 64). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவர் வீட்டை பூட்டிக் கொண்டு நேற்று முன்தினம் வேலூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 20 கிராம் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. 

இதுகுறித்து கே.வி.கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாகக் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்