கலவையில் மதுவிலக்கு, சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மதுவிலக்கு, சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் உத்தரவுப்படி நேற்று கலவை பஸ் நிலையம் அருகே மதுவிலக்கு மற்றும் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார ஊர்வலம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, உதவி ஆணையர் (காலல்) சத்தியபிராசந்த், கலவை தாசில்தார் சமீம், கலால் தாசில்தார் நடராஜன், ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி முதல்வர் வெங்கட்ராமன், கலவை பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி, இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பஜார் வீதி, நமந்தகரை வீதி, லப்பைதெரு, வாழைப்பந்தல் சாலை வழியாக சென்றனர்.
அப்போது மதுவுக்கு அடிமை ஆகாதே, மதுவில் மயங்காதே, மதியை இழக்காதே என கோஷமிட்டபடி சென்றனர். துண்டு பிரசுரங்களும் வழங்கினர். வருவாய்த்துறையினர், பேரூராட்சி ஊழியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.