நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-12-14 17:23 GMT
நாமக்கல்:
42 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. 
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 62 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 104 ஆக அதிகரித்து உள்ளது.
462 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று 44 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 53 ஆயிரத்து 126 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 516 பேர் உயிரிழந்த நிலையில், 462 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்