மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சாலை மறியல்
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சாலை மறியல்
கே.வி.குப்பம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கே.வி.குப்பம் கிளை சார்பில் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகம் எதிரில் சாலை மறியல் நடைபெற்றது. மாவட்ட இணை செயலாளர் இ.சுகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் தசரதன், ரமேஷ், சுந்தரவேல், தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோபால ராஜேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தித் தரக்கோரி கோஷமிட்டனர். இதில் கே.வி.குப்பம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 186 பேரை கே.வி.குப்பம் போலீசார் கைது செய்தனர்.