சங்கராபுரத்தில் பா ஜ க வினர் திடீர் சாலை மறியல்
சங்கராபுரத்தில் பா ஜ க வினர் திடீர் சாலை மறியல்
சங்கராபுரம்
ரெட்டி(கஞ்சன்) சமுதாய மக்களுக்கு ஜாதி சான்று வழங்காத தாசில்தார் மற்றும் துணை தாசில்தாரை கண்டித்து பா.ஜ.க. சார்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ரவி, பொதுச்செயலாளர்கள் செந்தில், ராஜேஷ், மாவட்ட செயலாளர் வக்கீல் ஜெயதுரை, மலையம்மா, கலைப்பிரிவு பிரகாசம், தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாநில செயலாளர் துரைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய தலைவர் தாமரைசேகர் வரவேற்றார். மாவட்ட தலைவர் பாலசுந்தரம் உண்ணாவிரத்தை தொடங்கி வைத்தார். இதில் நிர்வாகிகள் சந்திரமோகன், ஹரிகோபால், பிரகாஷ், அசோகன் மற்றும் ரெட்டி(கஞ்சம்) சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாலையில் உண்ணாவிரதம் இருந்த பா.ஜ.க.வினர் திடீரென சங்கராபுரம் -கள்ளக்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.