திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள சாங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமன்(வயது 31). இவர் நேற்று மொபட்டில் மணலூர்பேட்டை அருகே உள்ள சித்த பட்டினம் கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் மணலூர்பேட்டை-திருவண்ணாமலை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு பெட்ரோல் போட சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இ்ந்த விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.