கார் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து: பா.ம.க. கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள் 11 பேர் படுகாயம்

பா.ம.க. கூட்டத்துக்கு வந்த தொண்டர்கள் பயணம் செய்த ஆட்டோ மீது கார் மோதியது.இதில் அக்கட்சியை சேர்ந்த 11 தொண்டர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2021-12-14 16:50 GMT

விக்கிரவாண்டி, 

விழுப்புரத்தில் நேற்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். 

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அந்த வகையில், விக்கிரவாண்டி பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொண்டர்கள் சிலர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, பின்னர் அவர்கள் வந்த ஆட்டோவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

 அப்போது, பாப்பனப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோவந்த போது, பின்னால் வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

11 பேர் காயம்

அதில் பயணம் செய்த பொன்னன்குப்பம் கிராமத்தை சேர்ந்த பழனி (வயது 60), சுப்பிரமணி(60), வீரப்பன்(60), கோவிந்தசாமி(60),  நாகப்பன்(50), நாகராஜ்(45), கோபாலகிருஷ்ணன்(45), கணேசன்(35), பழனி மகன் பாலு (32),  செல்லப்பன் மகன் சோபன்பாபு (28) மற்றும் ஆட்டோவை ஓட்டி வந்த குணசேகர்(45) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.  சிவக்குமார் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான புகழேந்தி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்