மாநில அளவிலான தடகள போட்டியில் முதலிடம்
மாநில அளவிலான தடகள போட்டியில் முதலிடம்
வீரபாண்டி,
மாநில அளவிலான தமிழ்நாடு தடகள சங்கம் நடத்திய தடகள போட்டி திண்டுக்கல் பொறியியல் கல்லூரியில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்த மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் மாணவன் ஜி.யுகேஷ் போட்டியில் கலந்து கொண்டார். 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு (1.32. 90) வினாடியில் போட்டியின் தூரத்தைக் கடந்து முதல் பரிசை தட்டிச்சென்றார். மாநில அளவில் முதல் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனை இடுவம்பாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜராஜேஸ்வரி பாராட்டினார்.இதற்கு உறுதுணையாக இருந்த உடற்பயிற்சி இயக்குனர் மகேந்திரன், உதவி தலைமை ஆசிரியர்கள் வனிதாசுகந்தி, சுமதி வசந்தகுமாரி ஆகியோரும் மாணவனை பாராட்டினர்.