சங்கராபுரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை 2 வாலிபர்கள் கைது

சங்கராபுரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை 2 வாலிபர்கள் கைது

Update: 2021-12-14 16:12 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி தலைமையிலான போலீசார் கொசப்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்களை வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

 விசாரணையில் அந்த வாலிபர் செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த பாரத்(வயது 27) என்பதும், சங்கராபுரத்தில் உள்ள மளிகை கடையில் புகையிலை பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பாரத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல்செய்தனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கராபுரம் பூட்டைசாலையில் உள்ள மளிகை கடை வியாபாரி பாக்கம்புதூரை சேர்ந்த தேவேந்திரன்(வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 820 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்