நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது மாயமான வாலிபர் ஆற்றில் பிணமாக மிதந்தார்

நண்பர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது மாயமான வாலிபர் ஆற்றில் பிணமாக மிதந்தார்;

Update: 2021-12-14 16:08 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள டி.தேவனூர் ராஜவீதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குரு(வயது 36). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சரவணன் மற்றும் அன்பு ஆகியோருடன் அருகில் உள்ள துரிஞ்சல் ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் குரு வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றதாகவும், அதன் பின்னர் சரவணன், அன்பு இருவரும் மீன்பிடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் நண்பர்களிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற குரு அவரது வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அரகண்ட நல்லூர் போலீசார் துரிஞ்சல் ஆற்றில் கடந்த 5 நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று அரகண்டநல்லூர் மண்எண்ணெய் பெட்ரோல் பங்க் பின்புறம் தென்பெண்ணை ஆற்றின் கரை ஓரம் முருகனின் உடல்  மிதந்தது.  இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், அவரது உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகனின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்