ரிஷிவந்தியம் அருகே ஆடு திருடிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
ரிஷிவந்தியம் அருகே ஆடு திருடிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அடுத்த செட்டிதாங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஆடுடன் வந்த 2 வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் காட்டுச்செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்(வயது 20), அதே கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(22) என்பதும், இவர்கள் கொண்டுவந்த ஆடு ரிஷிவந்தியம் அருகே உள்ள கொம்பசமுத்திரத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் ஆட்டு கொட்டகையில் இருந்து திருடப்பட்டது என்பதும் அதை விற்பதற்காக சந்தைக்கு வந்தபோது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து தினேஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆட்டையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.