வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
சேவூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் மேலத்திருப்பதி எனப் போற்றப்படுவதுமான மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் அதிகாலை 4 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப்பெருமாள், வைகுண்டநாத பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமதே வெங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புஷ்ப பல்லக்கில் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.