கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 104 கிலோ குட்கா பறிமுதல்-அண்ணன்-தம்பி கைது

கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 104 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-14 15:07 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கடையில் பதுக்கி வைக்கப்பட்ட 104 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
குட்கா பறிமுதல் 
கிருஷ்ணகிரி டவுன் ராசுவீதி பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் நேற்று அதிரடியாக அந்த கடையில் சோதனை நடத்தினார்கள். இதில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 104 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
அண்ணன்-தம்பி கைது 
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை பதுக்கி வைத்ததாக கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்த மங்களராம் (வயது 25), அவரது தம்பி மகேந்தர் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து இவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்