திருச்செந்தூரில் பல்கலைக்கழக அளவில் கபடி, டேபிள் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்கலைக்கழக அளவில் கபடி, டேபிள் டென்னிஸ் போட்டி நாளை தொடங்குகிறது

Update: 2021-12-14 15:05 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைகழக அளவில் கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கு கபடி போட்டியும், பெண்களுக்கு டேபிள் டென்னிஸ் போட்டியும் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து 19-ந் தேதி வரை இப் போட்டிகள் நடக்கிறது.
போட்டியில் 20-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. விளையாட்டு போட்டிகள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

மேலும் செய்திகள்