தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-14 14:29 GMT
சாலையை சீரமைக்க வேண்டும்
பறக்கை சந்திப்பில் இருந்து வேதநகருக்கு ஒரு சாலை  செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                                 -ஜவகர், வேதநகர்.
விபத்து அபாயம்
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்குட்பட்ட சிவராமபுரம் பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பணிகள் முடிந்தபின்பு பள்ளத்தில் பெரிய பெரிய கற்களை போட்டுள்ளனர். ஆனால், அந்த பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் உள்ள பள்ளத்தை சரியாக மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                       -ச.பிரபு, சிவராமபுரம்.
நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க வேண்டும்
ராமன்துறையில் இருந்து நாகர்கோவிலுக்கு தடம்எண் 309இ என்ற 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்கள் மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ்கள் கடந்த 2 மாதங்களாக இயக்கபடவில்லை. இதனால் அந்த பஸ்சை நம்பி இருந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
                                                               -இன்பன்ட் தாஸ், இனயம்.
சீரமைக்க வேண்டிய சாலை
தாடிக்காரன்கோணத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் வாழை மரங்களை நட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                             -வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
எரியாத தெரு விளக்குகள்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்-பெருமாங்குழி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி மிகவும் இருட்டாக காணப்படுகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                      -சுனில்குமார், கருங்கல்.
தடுப்பணையை சீரமைக்க வேண்டும்
 தடிக்காரன்கோணம் ஊராட்சிக்குட்பட்ட சைபன் பகுதியில் தோவாளை கால்வாய் செல்கிறது. இ்ந்த கால்வாயின் குறுக்கே தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் தேங்கிய நீரை விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில், தற்போது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடைந்த தடுப்பணையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
                                                     -ஜினோ, தடிக்காரன்கோணம். 
பழுதடைந்த மின்விளக்குகள்
கருங்கல் முதல் பெருமாங்குழி வரை செல்லும் சாலையில் உள்ள 6 மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                     -ஆர்.ஜார்ஜ், கருங்கல். 

மேலும் செய்திகள்