மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது
கோவை
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது அவர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர்.
முன்னதாக கோவை மாவட்ட குழு நிர்வாகி புனிதா கூறுகையில்,
தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் ஊனமுற்றோருக்கு ரூ.1000, கடுமையான ஊனம் உள்ளவர் களுக்கு ரூ.1,500 வழங்கப்படுகிறது.
அது அத்தியாவசிய செலவுகளுக்கு கூட போதாது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை முறையாக செய்ய வேண்டும் என்றார். கைதான மாற்றுத்திறனாளிகள் 20 பேரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.