அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

Update: 2021-12-14 14:20 GMT

கோவை

கோவை பூசாரிபாளையத்தில் நூற்றாண்டு பழமையான அடைக்கலம் மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சாட்டையடி திருவிழா நடத்தப்படும். 

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. 

அன்று காலை 8 மணிக்கு கொடியேற்றம், முத்திரை வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. 

இதையடுத்து அம்மன் அழைப்பு, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிடிமண் எடுத்தல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

நேற்று மதியம் சாட்டையடி திருவிழா நடைபெற்றது.


இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது உடம்பில் சாட்டையால் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர். 

ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக நரசாம்பதி குளத்தை அடைந்தது. அங்கு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும்  கோவி லை வந்தடைந்தது.

 இதையடுத்து அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா, வருகிற 17-ந் தேதி அம்மனுக்கு அபிஷேக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்