கோவை
பாரதியார் பல்கலைக்கழக அளவிலான கூடைப்பந்து போட்டி கோவை சுகுணா கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நேற்றும் போட்டிகள் நடைபெற்றன.
முதல் போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக அணியும், பிஷப் அம்புரோஸ் கல்லூரி அணியும் மோதின.
முடிவில் பாரதியார் பல்கலைக்கழக அணி 56-20 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வென்றது. 2-வது போட்டியில் கே.பி.ஆர். கல்லூரி அணி, சி.எம்.எஸ். கல்லூரி அணியை எதிர் கொண்டது.
இதில் சி.எம்.எஸ். கல்லூரி அணி 31-16 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
3-வது போட்டியில் கோபி கலைக்கல்லூரி அணி 54-19 என்ற புள்ளிக் கணக்கில் நேரு கல்லூரியை வீழ்த்தியது. 4-வது போட்டியில் சுகுணா கல்லூரி அணியும், பி.எஸ்.ஜி. கல்லூரி அணியும் மோதின.
முடிவில் பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 75-35 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இன்று (புதன்கிழமை) இறுதி போட்டி நடைபெறுகிறது. மாலையில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை வழங்கப்படுகிறது.