தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்;

Update:2021-12-14 17:00 IST
தூத்துக்குடி:
தூத்துக்குடி பெருமாள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மகராஜன். இவருடைய மகன் கருப்பசாமி (வயது 20). இவர் போல்டன்புரம் 1-வது தெருவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், விரைந்து சென்று கஞ்சா விற்ற கருப்பசாமியை கைது செய்தார். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

மேலும் செய்திகள்