அண்ணாநகரில் போலீசார் சைக்கிள் பேரணி

சென்னையில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் இரவு நேரங்களில் சைக்கிளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.;

Update: 2021-12-14 09:51 GMT
இந்தநிலையில் போதை பழக்கத்தை கைவிடுவது, சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான அத்து மீறல்களை தடுப்பது, கொரோனா விழிப்புணர்வு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அண்ணாநகரில் போலீசார் சைக்கிள் பேரணி நடத்தினர். அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட அரும்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ள உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

சைக்கிள் பேரணியை அண்ணாநகர் துணை கமிஷனர் தீபா கணிகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அண்ணா நகர் ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, சாந்தி காலனி, நடுவங்கரை, ஈ.வி.ஆர். சாலை வழியாக சென்று அண்ணா வளைவு அருகே முடிவடைந்தது.

மேலும் செய்திகள்