பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 100 பேருக்கு புதிய ரேஷன் அட்டை

சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் 100 பேருக்கு புதிய ரேஷன் அட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

Update: 2021-12-14 09:31 GMT
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு மண்டல அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர்கள் என்.சந்திரன், பி.குணாளன், ஜெ.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முகாமில் பங்கேற்ற பொதுமக்கள், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். கால்வாய் வசதி, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு, வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

பின்னர் புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த 100 பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் ஜான்சிராணி, உணவு வழங்கல் உதவி கமிஷனர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்