அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த சிறுமி உள்பட 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு?

அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-13 20:51 GMT
பெங்களூரு: அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பதை கண்டறிய சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5 பேருக்கு கொரோனா

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் இருந்து கர்நாடகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு, விமான நிலையத்தில் வைத்தே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பெங்களூருவில் 3 பேர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நேற்று காலையில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமி உள்பட 5 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 18 வயதான 2 வாலிபர்கள், 24 வயதான ஒரு இளம்பெண், 4 வயது சிறுமி மற்றும் 6 வயது சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஒமைக்ரான் வைரஸ் பீதி

ஆனால் அவர்கள் 5 பேரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இதையடுத்து, கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் 5 பேரும், ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்பதை கண்டறிய, அவர்களது சளி மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு புறநகர் மாவட்ட கலெக்டர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த 5 பேரும், பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதால் பெங்களூருவில் ஒமைக்ரான் வைரஸ் பீதி ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்