பாகலஅள்ளியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 59 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

பாகலஅள்ளியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 59 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-12-13 20:44 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நல்லம்பள்ளி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாகலஅள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2,500 கிலோ எடை கொண்ட 59 மூட்டை ரேஷன் அரிசி, 100 கிலோ கோதுமை  பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி, கோதுமை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கோதுமை மூட்டைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்