திருச்சி, டிச.14-
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 78,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 77,381 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 202 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட காவல்துறையை பொறுத்தவரை முன்னாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்பட 150-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளனர்.
இந்தநிலையில் லால்குடி காவல் உட்கோட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சீத்தாராமன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.