வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

வாலீஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2021-12-13 20:28 GMT
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாகம் வளர்க்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. மூலஸ்தானத்தின் முன்பு உற்சவமூர்த்தியை வைத்து, சுற்றியும் 1,008 சங்குகள் அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பூஜைகளுக்கு பின்னர் 1,008 சங்குகளில் இருந்த புனிதநீரை கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்